இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 July 2021 8:11 PM IST (Updated: 29 July 2021 8:11 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் விஷ்ணுவர்தன் தலைமை தாங்கினார். 

மாநில இணை செயலாளர் பாலசந்திரபோஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும். 

ரெயில்வே துறையில் கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் மீண்டும் வழங்க வேண்டும். ரெயில்களில் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கான முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story