போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
திண்டுக்கல்லில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
திண்டுக்கல்:
போதைப்பொருள் புலனாய்வு துறை சார்பில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் வசந்தாமணி தலைமை தாங்கினார்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, போதைப்பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதை பொருட்களை நுகர்பவர்களை தடுப்பதைவிட அவற்றை விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து போதைப்பொருள் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்றார். கருத்தரங்கில் ஜி.டி.என். கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story