மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்:முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 2,178 பேர் மீது வழக்கு + "||" + Demonstration without permission

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்:முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 2,178 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்:முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 2,178 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 2,178 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம், 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும்,

 மேற்கண்ட கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து விட்டு நிறைவேற்றாமல் உள்ள தி.மு.க. அரசை கண்டித்தும் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 47 இடங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தல், கொரோனா ஊரடங்கு விதிமீறல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல்,

 நோய் தொற்று பரவும் என்று தெரிந்துகொண்டே கூட்டம் சேர்த்தல், தொற்று பரவலுக்கு காரணமாக இருத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் அர்ஜூணன், சக்கரபாணி உள்ளிட்ட 2,178 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
நெல்லை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.