மாவட்ட செய்திகள்

மதுக்கடை பார் ஊழியர் தற்கொலை + "||" + Bar employee commits suicide

மதுக்கடை பார் ஊழியர் தற்கொலை

மதுக்கடை பார் ஊழியர் தற்கொலை
செல்வபுரத்தில் மதுக்கடை பார் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை

கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 55). இவர் செல்வபுரத்தில் உள்ள மதுக்கடை பாரில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த ஆண்டு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். 

அப்போது அவரை உறவினர்கள் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து காப்பாற்றினார்கள். ஆனாலும் கடந்த சில நாட்களாக சாமிநாதன் மனவிரக்தியடைந்து காணப்பட்டார்.

 இந்த நிலையில்   செல்வபுரம் மதுக்கடை பார் அருகில் உள்ள தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.