காரிமங்கலம் அருகே வாகன சோதனை: லாரியில் கடத்தப்பட்ட 10½ டன் ரேஷன் அரிசி சிக்கியது 2 பேர் கைது

காரிமங்கலம் அருகே வாகன சோதனை: லாரியில் கடத்தப்பட்ட 10½ டன் ரேஷன் அரிசி சிக்கியது 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 July 2021 2:08 AM IST (Updated: 30 July 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே வாகன சோதனை: லாரியில் கடத்தப்பட்ட 10½ டன் ரேஷன் அரிசி சிக்கியது 2 பேர் கைது

தர்மபுரி:
குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவுபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, முரளி மற்றும் போலீசார் நேற்று தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் காரிமங்கலம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரியில் சோதனை செய்தபோது அதில் சுமார் 10.5 டன் எடைகொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை சேலத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரியில் சிக்கிய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த வேனில் வந்த ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது37), விஜயகுமார் (30) ஆகிய 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story