மாவட்ட செய்திகள்

ஆத்தூரில் பட்டப்பகலில் துணிகரம்மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்புஒருவர் பொதுமக்களிடம் சிக்கினார்; இன்னொருவர் தப்பி ஓட்டம் + "||" + 8 pound jewelry flush

ஆத்தூரில் பட்டப்பகலில் துணிகரம்மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்புஒருவர் பொதுமக்களிடம் சிக்கினார்; இன்னொருவர் தப்பி ஓட்டம்

ஆத்தூரில் பட்டப்பகலில் துணிகரம்மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்புஒருவர் பொதுமக்களிடம் சிக்கினார்; இன்னொருவர் தப்பி ஓட்டம்
ஆத்தூரில் மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற ஒருவரை பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்தனர். இன்னொருவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.
ஆத்தூர்
தையல் கடை
.ஆத்தூர் வடக்கு உடையார்பாளையத்தில் வசிப்பவர் ஜீவா (வயது42), தையல் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று மாலை 7 மணி அளவில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கேட்டனர். ஜீவாவும் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார்.
2 பேரில் ஒருவர் தண்ணீரை வாங்கி குடித்துக் கொண்டிருந்தார்.. இன்னொருவர் திடீரென தனது பேண்ட் பையில் இருந்த மிளகாய் பொடியை ஜீவாவின் முகத்தில் வீசினார் பின்னர் 2 வாலிபர்களும் ஜீவாவை தாக்கி விட்டு அவர் அணிந்து இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
துரத்தி பிடித்தனர்
ஜீவாவின் அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் ஜீவாவிடம் தங்க சங்கலியை பறித்து சென்ற வாலிபர்களை துரத்தி சென்றனர். இதில் ஒருவனை பிடித்தனர். மற்றொருவன் தப்பி சென்று விட்டான்.
பொதுமக்கள் விரட்டி பிடித்த நபரை ஆத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவரது பெயர் மனோஜ் (வயது 27) என்பதும், ராஜாஜி காலனியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட நபரிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை போலீசார் மீட்டனர்.
ஆத்தூரில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.