ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 30 July 2021 11:46 PM IST (Updated: 30 July 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

முத்தனேந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மானாமதுரை,

மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வந்தனர். ஆக்கிரமிப்பு இடத்தில் கடை நடத்துபவர்களை காலி செய்யும்படி வருவாய்த்துறையினர் பலமுறை அறிவுறுத்தியும் அவர்கள் காலி செய்யவில்லை. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. பின்னர் நேற்று காலை மானாமதுரை தாசில்தார் தமிழரசன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர். பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

Next Story