மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில்பிளஸ்-2 மாணவி பலாத்காரம்; விவசாயி கைது + "||" + farmer arrested

நாமக்கல்லில்பிளஸ்-2 மாணவி பலாத்காரம்; விவசாயி கைது

நாமக்கல்லில்பிளஸ்-2 மாணவி பலாத்காரம்; விவசாயி கைது
நாமக்கல்லில் பிளஸ்-2 மாணவி பலாத்காரம்; விவசாயி கைது
நாமக்கல்:
விருத்தாசலம் அருகே உள்ள ஆண்டிமடத்தை சேர்ந்தவர் கொக்கி என்கிற ராஜ்குமார் (வயது 25). விவசாயி. இவருக்கும், நாமக்கல் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி ராஜ்குமார் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் மாணவியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் ராஜ்குமார் செல்போன் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் பிளஸ்-2 மாணவியிடம் அறிமுகமாகி சுமார் 2 ஆண்டுகளாக பழகி வந்ததும், பின்னர் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல்லில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
நாமக்கல்லில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
2. நாமக்கல்லில் மாவட்ட சமையல் போட்டி
நாமக்கல்லில் மாவட்ட சமையல் போட்டி
3. நாமக்கல்லில் லாரி டிரைவரிடம் ரூ.25 ஆயிரம் வழிப்பறி திருநங்கைகள் 3 பேர் கைது
நாமக்கல்லில் லாரி டிரைவரிடம் ரூ.25 ஆயிரம் வழிப்பறி திருநங்கைகள் 3 பேர் கைது.
4. நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
5. நாமக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்