இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2021 10:26 PM IST (Updated: 2 Aug 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை,

சிவகங்கை வண்டவாசி ரோடு முத்துநகரை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 60). இவரது மனைவி ராணி(58). இவர்களது மகன்கள் ஜோசப்சேவியர்(25), கிறிஸ்டோபர்(20). இருவரும் பிலிப்ைபன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தனர். தற்போது ஆன்லைனில் வீட்டில் இருந்து படித்து வந்தனர்.
இவர்களுக்கு சொந்தமான நிலம் வண்டவாசியில் இருந்து அண்ணாமலை நகர் செல்லும் வழியில் உள்ளது. அங்கு பாழடைந்த வீட்டில் ஒரு கும்பல் மது குடித்து கொண்டு இருந்தது. இதை தட்டி கேட்ட ஜோசப்சேவியர், கிறிஸ்டோபரை மது கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் கிறிஸ்டோபர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஜோசப்சேவியர் சிவகங்கை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது தந்தை இருதயராஜ் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த இரட்டை கொலை வழக்குப்பற்றி சிவகங்கை நகர் போலீசார் வழக்குபதிவு செய்து, ஏற்கனவே மருதுபாண்டி, நந்தகுமார், வசந்த், பாலாஜி, ;சரவணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருவாடானையை சேர்ந்த முரளி (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story