மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 2 பேர் கைது
மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,ஆக
மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
மதுரையைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:-
இன்ஸ்டராகிராம் மூலம் சிவகங்கை அல்லிநகரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சந்தோஷ்குமார் (வயது 20) பழக்கமானார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன் பின்னர் நாங்கள் இருவரும் தனிமையில் இருந்த போது அதனை சந்தோஷ்குமார் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டார்.
மேலும் அந்த வீடியோவை இன்ஸ்ட்ராகிராமில் பதிவிடுவதாக கூறி மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் வாங்கினார். மேலும் அவர் தனது நண்பரான மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ராகுலுக்கு (20) அந்த வீடியோவை அனுப்பியுள்ளார். அதை கொண்டு அவரும் மிரட்டி பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
கைது
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவின் கீழ் மாணவர்கள் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.
Related Tags :
Next Story