கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
ெபரம்பலூர் அருகே கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.
பெரம்பலூர்:
புகையிலை பொருட்கள்
பெரம்பலூரை அடுத்த செட்டிகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் பாஷா தலைமையில் போலீஸ் குழுவினர் செட்டிகுளத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அப்பகுதியில் தெற்கு தெருவில் உள்ள முருகானந்தம் (வயது 31) என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தில் அதிரடி சோதனை நடத்தியதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதையடுத்து அங்கிருந்து சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 25 கிலோ குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முருகானந்தம் கைது செய்யப்பட்டார். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முருகானந்தம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story