தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு


தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 5 Aug 2021 6:07 AM GMT (Updated: 2021-08-05T11:37:20+05:30)

ஆவடி, திருமுல்லைவாயல், தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருடப்பட்டன.

ஆவடி, 

திருமுல்லைவாயல் வெங்கடாச்சலம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் வசந்தி (வயது 70). இவரது கணவர் இறந்து விட்டார். இவருடைய 3 பிள்ளைகளும் திருமணமாகி சிங்கப்பூரில் வசிக்கின்றனர். வசந்தி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு உதவியாக ஆவடியை அடுத்த பொத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத் (30) என்ற டிரைவரும், வீட்டு வேலை செய்வதற்காக அஞ்சலி என்ற பெண்மணியும் இருந்து வந்தனர்.

நேற்று முன்தினம் மதியம் வசந்தி, வீட்டின் பீரோவில் பார்த்தபோது நகை, பணம் இருந்துள்ளது. நேற்று காலை பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில், உரிமையாளர் வீட்டில் இருக்கும்போதே நகை, பணம் திருட்டுபோன சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story