விஜயநகர் அருகே 5 ஆடுகளை கொன்று தின்ற சிறுத்தைகள்


விஜயநகர் அருகே 5 ஆடுகளை கொன்று தின்ற சிறுத்தைகள்
x
தினத்தந்தி 6 Aug 2021 2:32 AM IST (Updated: 6 Aug 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

5 ஆடுகளை சிறுத்தைகள் வேட்டையாடி கொன்றன.

விஜயநகர்: விஜயநகர் மாவட்டம் கொட்டூரு தாலுகா தூபதள்ளி கிராமத்தில் ஒரு விவசாயி வசித்து வருகிறார். இவர், 5 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பாக தான் வளர்க்கும் ஆடுகளை விவசாயி கட்டிப்போட்டு இருந்தார். இந்த நிலையில், நள்ளிரவில் கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வந்த சிறுத்தைகள், ஆடுகளை தாக்கின. 

பின்னர் 5 ஆடுகளையும் கொன்ற சிறுத்தைகள், பாதியளவு இறைச்சியை தின்று விட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. நேற்று அதிகாலையில் எழுந்த விவசாயி தனது ஆடுகள் செத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சிறுத்தைகள் தான் தாக்கி ஆடுகளை கொன்றது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் வனத்துறை ஊழியர்கள் வந்து விசாரித்தனர். இதையடுத்து, சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு, விவசாயி மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story