கார் கவிழ்ந்து எரிந்து சேதம் ஆஸ்பத்திரி ஊழியர் காயம்
சென்னை போரூரில், கார் கவிழ்ந்து எரிந்து சேதம் ஆஸ்பத்திரி ஊழியர் காயம் ஏற்பட்டு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சென்னை,
சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருபவர் நாராயணன் (வயது 57). இவர், பழைய மாமல்லபுரம் சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். மாமல்லபுரம் அருகே கூத்தவாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், வலது பக்கத்தில் உள்ள ரிச்சர்டு என்பவரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
அப்போது பெட்ரோல் கசிவு ஏற்பட்டு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அந்த வீட்டில் உள்ளவர்கள், காருக்குள் சிக்கி தவித்த நாராயணனை மீட்டனர். இதில் தலையில் சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். பின்னர் அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து மாமல்லபுரம்
Related Tags :
Next Story