ஜீயபுரம் அருகே மகளின் தோழியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
ஜீயபுரம் அருகே மகளின் தோழியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஜீயபுரம்,
ஜீயபுரம் அருகே மகளின் தோழியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆட்டோ டிரைவர்
திருச்சி மாவட்டம் துறையூர் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். ஜீயபுரம் அருகே தனது சித்தி வீட்டில் சிறுமி தங்கி இருந்த போது, எதிர்வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் விஜயகுமார்(வயது 38) என்பவரின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தோழிகள் ஆனார்கள். இதனால் சிறுமியிடம் செல்போன் மூலம் விஜயகுமார் எஸ்.எம்.எஸ். அனுப்பி பழகி வந்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் சிறுமியை கண்டித்து செல்போனை வாங்கி கொண்டனர்.
பலாத்காரம்
இதனால் வேறு செல்போன் வாங்கிக்கொடுத்து சிறுமியிடம் விஜயகுமார் மீண்டும் பழகியுள்ளார். பின்னர் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரை கட்டாயப்படுத்தி விஜயகுமார் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமி விஜயகுமாருடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் மதுபோதையில் சிறுமியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
வலைவீச்சு
இதன்காரணமாக மனமுடைந்த சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல வாரியத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக ஆட்டோ டிரைவர் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயகுமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story