திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் சாவு


திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 6 Aug 2021 9:52 AM IST (Updated: 6 Aug 2021 9:52 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன். இவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் நேற்று முன்தினம் தளம் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கொத்தனாரான சாகிரூல்ஷேக் (வயது38) வைத்திருந்த அலுமினிய மட்டப்பலகை வீட்டின் மேலே சென்ற உயர் மின் அழுத்த மின்சார கம்பியின் மீது பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

உயிருக்கு போராடிய அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story