விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை


விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 6 Aug 2021 4:38 PM GMT (Updated: 2021-08-06T22:08:23+05:30)

தேனி-மதுரை மாவட்ட எல்லையில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டிப்பட்டி: 

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆண்டிப்பட்டி அருகே தேனி-மதுரை மாவட்ட எல்லையான திம்மரசநாயக்கனூர் போலீஸ் சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருபவர்களில் தடுப்பூசி போடாதவர்கள், விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த பணியில் வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பிரபு ராஜா, மருந்தாளுனர் ரஞ்சித் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
மேலும் கார், வேன் போன்ற வாகனங்களில் சமூக இடைவெளி இன்றி பயணம் செய்பவர்கள், முக கவசம் அணியாதவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

அதில் ஒரு  நாளைக்கு 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர தேனி  மாவட்டத்திற்கு வரும் அனைத்து பஸ்களிலும் பயணிகள் முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் பயணிக்கும்படி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

Next Story