நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்


நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 6 Aug 2021 7:14 PM GMT (Updated: 6 Aug 2021 7:14 PM GMT)

புதுவை நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

புதுச்சேரி, ஆக.7-
புதுவை நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
கொடியேற்றம்
புதுவை நெல்லித்தோப்பில் பிரசித்திபெற்ற புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 170-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட பரிபாலகர் அருளானந்தம் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியேற்றம் நடந்தது. பெருவிழானையொட்டி நாள்தோறும் திருப்பலி மற்றும் மறையுரைகள் நடத்தப்படும்.
கூட்டு திருப்பலி
முக்கிய நிகழ்ச்சியான பெருவிழா வருகிற 15-ந்தேதி மாலை நடக்கிறது. அன்றைய தினம் புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் அபீர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது.
மறுநாள் கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் செய்து வருகின்றனர்.

Next Story