கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு; உருவப்படத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை


கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு; உருவப்படத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
x
தினத்தந்தி 7 Aug 2021 5:31 PM GMT (Updated: 2021-08-07T23:01:45+05:30)

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு, அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செய்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருணாநிதி நினைவு தினம்

முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கருணாநிதி 3-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் தி.மு.க.வினர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story