குருவிகுளம் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு


குருவிகுளம் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 7 Aug 2021 8:13 PM GMT (Updated: 2021-08-08T01:43:01+05:30)

குருவிகுளம் அருகே அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர்.

திருவேங்கடம்:
திருச்செந்தூரில் இருந்து புளியங்குடிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. திருவேங்கடம் அருகே நாலுவாசன்கோட்டை- அழகநேரி இடையே காட்டுப்பகுதி வழியாக சென்றபோது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் திடீரென்று பஸ்சின் மீது கல்வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது.

இதில் பஸ் டிரைவரான புளியங்குடி சிந்தாமணியைச் சேர்ந்த தேவ் ஆனந்த், கண்டக்டரான செல்வராஜ் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story