ஆண்டிமடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
ஆண்டிமடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வரதராஜன்பேட்டை:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கோதண்டராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
ஆண்டிமடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், பெரியதத்தூர், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிடநல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, கூவத்தூர், குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன், தழுதாழைமேடு, கங்கை கொண்ட சோழபுரம், ஆயுதக்களம், உதயநத்தம், வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும்வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story