போலி போலீஸ் அதிகாரி குண்டர் சட்டத்தில் கைது
பட்டிவீரன்பட்டியில் சிக்கிய போலி போலீஸ் அதிகாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்:
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் விஜயன் (வயது 41). இவர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் போலி போலீஸ் உதவி கமிஷனராக வலம் வந்தார். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி கேரளாவில் இருந்து தேனி வழியாக திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டிக்கு வந்த விஜயனை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் போலி போலீஸ் அதிகாரி விஜயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கலெக்டர் விசாகனுக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் விஜயன் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பெரியகுளம் சிறையில் இருந்த அவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story