குற்றங்களை தடுக்க மேலும் 42 இடங்களில் கண்காணிப்பு கேமரா


குற்றங்களை தடுக்க மேலும் 42 இடங்களில் கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 15 Aug 2021 11:20 PM IST (Updated: 15 Aug 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

குற்றங்களை தடுக்க மேலும் 42 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கோவை

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். 

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. 

அதன் படி கடந்த 2 வாரங்களில் 51 இடங்களில் 82 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் மேலும் 42 இடங்களில் 42 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன என்றார். 


Next Story