திருப்பூர், சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து பெரியார் பெயரை நீக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வினீத்திடம், அர்ஜூன் சம்பத் மனு கொடுத்தார்.

திருப்பூர்,  சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து பெரியார் பெயரை நீக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வினீத்திடம், அர்ஜூன் சம்பத் மனு கொடுத்தார்.
x
தினத்தந்தி 16 Aug 2021 4:28 PM GMT (Updated: 16 Aug 2021 4:28 PM GMT)

திருப்பூர், சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து பெரியார் பெயரை நீக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வினீத்திடம், அர்ஜூன் சம்பத் மனு கொடுத்தார்.

திருப்பூர், 
சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து பெரியார் பெயரை நீக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வினீத்திடம், அர்ஜூன் சம்பத் மனு கொடுத்தார். 
உரிய மரியாதை வழங்கவில்லை 
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- 
சுதந்திர தினத்தையொட்டி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உரிய மரியாதை தமிழக அரசு வழங்கவில்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர போராட்ட வீரர்களை வரிசைப்படுத்தும் போது, வீரன் அழகுமுத்து கோன் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 
இதுபோல் தென்காசி மாவட்ட கலெக்டர், சுதந்திர போராட்ட வீரர் லட்சுமிகாந்தன் பாரதி மன வேதனையடையும் வகையில் நடந்துகொண்டுள்ளார். எனவே தென்காசி மாவட்ட கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பெரியார் பெயரை நீக்க...
மேலும், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக கடைபிடித்து, சுதந்திர தினத்தன்று கருப்பு கொடி ஏற்றிய பெரியார் சுதந்திர போராட்ட வீரர் என்று குறிப்பிடத்தக்கது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும். 
சுதந்திர தின 75-வது ஆண்டு பவள விழா ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களின் உண்மை வரலாற்றை பாட புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து பெரியார் பெயரை நீக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story