தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி


தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 19 Aug 2021 12:14 AM IST (Updated: 19 Aug 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நொய்யல்,
தேங்காய் பருப்பு
நொய்யல், மரவாபாளையம், மூலிமங்கலம், கொங்குநகர்,  திருக்காடுதுறை, நஞ்சை புகளூர், தவுட்டுப்பாளையம், கடம்பங்குறிச்சி, என்.புதூர், வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயரிட்டுள்ளனர். தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் பறித்து தேங்காய் மட்டைகளை அகற்றி தேங்காய்களாக விற்பனை செய்து வருகின்றனர். 
அதேபோல் தேங்காயை உடைத்து தேங்காய் பருப்புகளை எடுத்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் பரமத்திவேலூர், சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து வருகின்றனர்.
விலை வீழ்ச்சி
கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் ரூ.29-க்கும், இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் ரூ.28-க்கும் விற்பனையானது. அதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.108-க்கு விற்பனையானது. இந்த வாரம் தேங்காய் பருப்பு ஒரு கிலோ 106 ரூபாய் 20 பைசாவுக்கு விற்பனையானது. தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story