போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 19 Aug 2021 1:11 AM IST (Updated: 19 Aug 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

விக்கிமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே அடையகருங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெட்டும் பெருமாள். இவருடைய மகன் ராஜகுரு (வயது 25). கட்டிட தொழிலாளியான இவரும், பக்கத்து தெருவான சிவந்திபுரம் சர்ச் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகள் நந்திதாவும் (21) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு நந்திதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ராஜகுருவும், நந்திதாவும் வீட்டை விட்டு வெளியேறி, ஆலங்குளம் ராமர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் நேற்று விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து ராஜகுரு, நந்திதா ஆகியோரின் குடும்பத்தினரை போலீசார் பேச்சுவார்த்தைக்காக அழைத்தனர். ஆனால் நந்திதாவின் குடும்பத்தினர் வரவில்லை. ராஜகுரு, நந்திதா ஆகிய 2 பேரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால், அவர்களுக்கு அறிவுரை கூறி, நந்திதாவை கணவர் ராஜகுருவுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். 

Next Story