நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை - 30 பேர் மீது வழக்கு


நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை - 30 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Aug 2021 12:03 PM GMT (Updated: 19 Aug 2021 12:03 PM GMT)

நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் நேற்று முன்தினம் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மணவாளநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கொரோனா தொற்று பரவும் விதமாக சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு கூட்டமாக கூடி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதை தொடர்ந்து போலீசார் சமூக இடைவெளி யின்றி கூட்டமாக கூடியதாக நுங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தம்மாள் விஜயராகவன், கண்ணன், சரவணன் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story