நாகை உழவர் சந்தையில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
நாகை உழவர் சந்தையில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்,
நாகை உழவர் சந்தையை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். மேலும், உழவர் சந்தையில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இப்பகுதியில் உள்ள காய்கறி உற்பத்தியாளர்கள் உழவர் சந்தைக்கு தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வர ஏதுவாக போக்குவரத்து வசதி செய்து தரப்படும். இதன் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான காய்கறிகள் கிடைக்க உதவியாக இருக்கும் என கலெக்டர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் வடக்கு பொய்கைநல்லூர், வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளில் தோட்டக்கலை துறையின் மூலம் பயன்பெற்ற விவசாயிகளின் வயல்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தோட்டக்கலை துணை இயக்குனர் கலா, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் திவ்யா, ஜெயலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபாலன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story