மாவட்ட செய்திகள்

லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; புது மாப்பிள்ளை பலி + "||" + Motorcycle collision with truck; The new groom is killed

லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; புது மாப்பிள்ளை பலி

லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; புது மாப்பிள்ளை பலி
ஓட்டப்பிடாரம் அருகே லாரி மீது மோட்டார்சை்ககிள் மோதியதில் புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

டிரைவர்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் லட்சுமணன் (வயது 30). இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது குறுக்குச்சாலை அருகே பெட்ரோல் பங்க் அருகில் ரோட்டில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது.

பரிதாப சாவு

இதில் லட்சுமணனுக்கு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பொய்யாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் கணேசனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த லட்சுமணனுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு
நெல்லையில் விபத்தில் காயமடைந்த மூதாட்டி இறந்தார்.
2. விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. கோபி அருகே வேன்-ஆட்டோ மோதல்; சிறுமி பலி
கோபி அருகே வேனும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார்.
4. விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு
விபத்தில் காயம் அடைந்த முதியவர் இறந்தார்.
5. விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.