ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை டவுன் பகுதியில் மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற மினி லாரியில் 45 மூட்டைகளில் மொத்தம் 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மினி லாரி உரிமையாளரான நெல்லை டவுனைச் சேர்ந்த மகாராஜன் (வயது 32), டிரைவரான கீழக்கலங்கலைச் சேர்ந்த மகேந்திரன் (28), கிளீனரான நெல்லை டவுனைச் சேர்ந்த சக்திவேல் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story