அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 Aug 2021 1:16 AM IST (Updated: 23 Aug 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் காளியம்மன், சுண்டங்குளம் அங்காளபரமேஸ்வரி, சுண்டங்குளம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மாரியம்மன், காளியம்மன், கொங்கன்குளம் காளியம்மன், ஏ.லட்சுமிபுரம் காளியம்மன், முத்துசாமிபுரம் காளியம்மன், மாதாங்கோவில்பட்டி காளியம்மன், நரிக்குளம் காளியம்மன் ஆகிய கோவில்களில் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு  பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story