வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசம்
மூலைக்கரைப்பட்டியில் வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசமாயின.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் சாலையில், பாரதியார் தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது 50). சொந்தமாக மாடு வளர்த்து வருகிறார். மாடுகளுக்கு உணவுக்கு தேவைப்படும் வைக்கோல் படப்புகளை அருகில் உள்ள அவருக்குச் சொந்தமான காமராஜர் தெருவில் உள்ள இடத்தில் வைத்துள்ளார். நேற்று மாலை அந்த வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென பரவி அங்கிருந்த நான்கு வைக்கோல் படப்புகளும் எரிந்து தீக்கிரையானது. தகவல் அறிந்ததும் நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அருகில் உள்ள வீடுகள் மற்ற இடங்களுக்கு தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அணைத்தனர். வைக்கோல் படப்பில் எப்படி தீப்பிடித்தது, மர்மநபர்கள் யாரும் வைக்கோல் படப்புக்கு தீ வைத்தனரா? என்ற கோணத்தில் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகபெருமாள் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story