கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்


கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 25 Aug 2021 5:22 PM GMT (Updated: 25 Aug 2021 5:22 PM GMT)

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில், சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி காளிமுத்து தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் மூர்த்தி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், தலைவர் மாலதி, பொருளாளர் பாண்டியன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், செயலாளர் அன்பழகன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், கணேசன், வைத்தியநாதன், அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கட்டுப்படுத்த வேண்டும்

நலவாரிய பதிவினை எளிமையாக்க வேண்டும். பணப்பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும். பணியிடங்களுக்கு வெளியே நடைபெறும் விபத்து உயிரிழப்புகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தொழிலாளியின் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்.

மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். மணல், கம்பி உள்பட கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story