ஓமலூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: பெங்களூரு செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்


ஓமலூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: பெங்களூரு செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
x
தினத்தந்தி 29 Aug 2021 4:44 AM IST (Updated: 29 Aug 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக பெங்களூரு செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

சூரமங்கலம்:
ஓமலூர் ரெயில் நிலையத்தில் தண்டவாள பாதையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் ரெயில்கள் திருப்பத்தூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. 
பெங்களூரு- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரெயில் (வண்டி எண் 02677) பெங்களூருவில் இருந்து 31-ந் தேதி காலை 6.10 மணிக்கு புறப்பட்டு ஓசூர், தர்மபுரி, ஓமலூர் வழியாக செல்லாமல் மாற்றுப்பாதையான கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம் வழியாக சேலம் வந்தடையும், இதேபோல் கோவை- லோக்மான்யதிலக் (வண்டி எண் 01014) தினசரி ரெயில் 31-ந் தேதி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு சென்றடையும். எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் (வண்டி எண் 02678) 31-ந் தேதி காலை 9.10 மணிக்கு புறப்பட்டு சேலம் திருப்பத்தூர், குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு சென்றடையும்.  இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story