கரூரில் ஒரேநாளில் 10,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 10 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கரூர்,
கொரோனா தடுப்பூசி முகாம்கள்
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இந்தநிலையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட கொங்கு பள்ளி, அரசு பழைய மருத்துவமனை வளாகம், பசுபதிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடவூர் அரசு இடைநிலைப்பள்ளி, காணியாளம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
கரூர், தோகைமலை ஒன்றியம்
கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மண்மங்கலம் அரசு ஆரம்ப பள்ளி, வாங்கல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், பண்டுகாரன் புதூரில் அமைந்துள்ள அரசு மகளிர் கல்லூரி, பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னதாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், வி.எஸ்.பி. என்ஜினீயரிங் கல்லூரி, அரசு ஆரம்பப்பள்ளி, பலமாபுரம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.தோைகமலை ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளை அரசு தொடக்கப்பள்ளி, தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையம், அரவக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஈசநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி, மலைக்கோவிலூர் வட்டார சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள்
தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட உப்பிடமங்கலம் சுகாதார நிலையம், பாகநத்தம் அரசு இடைநிலைப்பள்ளி, கோவிந்தம் பாளையத்தில் உள்ள உத்தமி பொன்னுச்சாமி திருமண மண்டபம், குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டு மருதூர் அரசு உதவிபெறும் பள்ளி, இனுங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.குளித்தலை நகராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கரூர் நகராட்சி பழைய அரசு மருத்துவமனையிலும், குளித்தலை நகராட்சி அரசு தலைமை மருத்துவமனையிலும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
10,500 பேருக்கு தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் நேற்று 26 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 10 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்களில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், நீண்டவரிசையில் நின்று கொரோனா முதல் மற்றும் 2-வது தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
Related Tags :
Next Story