உலக சாதனைக்காக 150 கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி


உலக சாதனைக்காக 150 கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 29 Aug 2021 6:57 PM GMT (Updated: 2021-08-30T00:27:33+05:30)

உலக சாதனைக்காக 150 கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

லாலாபேட்டை
கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் நேற்று பினக்ஸ் புக் உலக சாதனை மற்றும் கிராமிய புதல்வன் அகாடமி சார்பில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி தவில், நாதஸ்வரம், பறை, பம்பை உள்ளிட்டவைகளை இசைக்கும் கலைஞர்கள் மூலம் 75 நிமிடம் இசைக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஐ.நா.வின் தூதுவர் கலையரசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர் நலச்சங்க மாநில செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில் 150 கலைஞர்கள் கலந்து கொண்டு 75 நிமிடம் தொடர்ந்து வாசித்து சாதனை படைத்தனர். இதனை சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Next Story