மாவட்ட செய்திகள்

வீடு தீப்பற்றியதில் நகை- பணம், பொருட்கள் எரிந்து நாசம் + "||" + Jewelry, money and belongings were destroyed in the house fire

வீடு தீப்பற்றியதில் நகை- பணம், பொருட்கள் எரிந்து நாசம்

வீடு தீப்பற்றியதில் நகை- பணம், பொருட்கள் எரிந்து நாசம்
வீடு தீப்பற்றியதில் நகை- பணம், பொருட்கள் எரிந்து நாசமானது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது குடும்பத்தினருடன் குழுமூரில் உள்ள தனது உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று காலை முதலே செந்துறையை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று பலமாக வீசிய நிலையில் முருகேசனின் கூரை வீட்டின் மேலே தாழ்வாக சென்ற மின் கம்பி கூரையின் மீது உரசியதில் ஏற்பட்ட தீப்பொறியால் வீடு தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் இது பற்றி முருகேசனுக்கும், செந்துறை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், காற்றின் மூலம் தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. முருகேசன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு முழுவதும் எரிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது ெதரியவந்தது. இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்று தீ விபத்து ஏற்படாமல் தடுக்க, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான்: வீடு தீ பிடித்து ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டில் வீடு தீ பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. தைவான் கட்டிட தீ விபத்து; 46 பேர் பலி
தைவான் நாட்டில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. திருமண மண்டபத்தில் தீ விபத்து
வத்திராயிருப்பு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
4. பவானி அருகே மின்னல் தாக்கி குடோனில் பயங்கர தீ விபத்து; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம்; 18 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
பவானி அருகே மின்னல் தாக்கியதில் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம் ஆனது. 18 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
5. கரும்பு ஆலை, பால்பண்ணையில் தீ விபத்து
வாடிப்பட்டி அருகே கரும்பு ஆலை, பால்பண்ணையில் தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமானது