வாலிபரை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு
வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்(வயது 28). இவர் அத்தியூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதே கிராமத்தை சேர்ந்த சங்கர்(வயது 22) உள்பட 3 பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லி உள்ளனர். ஆனால் தமிழரசன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் உள்பட 3 பேரும், வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று புதுப்பேட்டை கிராமம் அருகே தமிழரசனை வழிமறித்து கைகளாலும், கட்டையாலும் தாக்கி உள்ளனர். இதில் தமிழரசனுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தமிழரசன் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story