விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்
தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் அய்யப்பன், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் நகர பொதுச்செயலாளர் செல்வபாண்டியன், நகர தலைவர் வெங்கலபாண்டி மற்றும் நிர்வாகிகள் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் வருகிற 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யவும், 11-ந்தேதி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் திட்டமிட்டுள்ளோம். தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோவிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றில் சிலைகளை கரைப்பது வழக்கம். எனவே, சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story