வந்தவாசியில் குடும்பத்தினருடன் பெண் மறியல்
வந்தவாசியில் குடும்பத்தினருடன் பெண் மறியலில் ஈடுபட்டார்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷினி (வயது 34). இவருடைய கணவர் தட்சிணாமூர்த்தி (39). சென்னை ஆவடியை சேர்ந்த இவர் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார்.
சுபாஷினி, தட்சிணாமூர்த்திக்கு 2-வது மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு மதுமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தட்சிணாமூர்த்தி சென்னையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுபாஷினி வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுபாஷினி நேற்று வந்தவாசி கோட்டை மூலப்பகுதியில் தனது குடும்பத்தினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story