13 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒருவர் பலி
13 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒருவர் பலி
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் தினமும் சராசரியாக 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்றைய பரிசோதனையில் 13 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பினால் இதுவரை 1,109 பேர் பலியாகி உள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story