காங்கேயத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


காங்கேயத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
x
தினத்தந்தி 31 Aug 2021 9:29 PM IST (Updated: 31 Aug 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

காங்கேயம், 
காங்கேயத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு போராட்டங்கள்
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த பி.ஏ.பி பாசனத்தில் மொத்தம் 3.77லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. 
இதில் 4 மண்டலங்களாக பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணிரில் வெள்ளகோவில் கிளை வாய்காலில் உள்ள 48 ஆயிரம் ஏக்கருக்கு வழங்க வேண்டிய அளவைவிட குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதாக கூறி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் புகார்
ஒவ்வொரு முறை தண்ணீர் திறப்பின் போதும் 7 நாள் அடைப்பு 7 நாள் திறப்பு எனும் நிலையில் 9 சுற்றுக்கள் வழங்க வேண்டிய நிலையில் இருந்து படிப்படியாக தண்ணீர் வழங்கும் நாட்களை குறைத்து விட்டனர். மேலும் தற்போது தண்ணீர் 3 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் மேல் மடையில் தொடர் தண்ணீர் திருட்டும், அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்ந்து வந்தது. 
240 கனஅடி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் 129 கன அடி தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முறையாக தண்ணீர் திறக்ககோரியும், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காங்கேயம் பகுதி பி.ஏ.பி. பாசன விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நீர் வழங்கப்படும் என உத்தரவாதம் கொடுத்த பின்பு உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.
பொறியாளர்கள் சிறைபிடிப்பு
இந்நிலையில் நேற்று காங்கேயத்தில் உள்ள பி.ஏ.பி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் உடுமலை பி.ஏ.பி செயற்பொறியாளர் கோபி மற்றும் காங்கேயம் பி.ஏ.பி உதவி செயற்பொறியாளர் அசோக் பாபு ஆகியோரை பி.ஏ.பி பாசன விவசாயிகள் சிறைபிடித்து தங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ஒரு சுற்று முடிவடைந்த நிலையில் இன்னமும் 4 சுற்று தண்ணீர் வரும் நிலையில் குளறுபடிகளை சரிசெய்து உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூறும்போது “  இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் பொதுப்பணித்துறை மெத்தனம் காட்டி வருகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். கடை மடை விவசாயிகளுக்கு உரிய தண்ணீரை வழங்குவதில் பொதுப்பணித்துறை கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.

Next Story