விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ- மாணவிகள் தடுப்பூசி போடாதவர்களுக்கு உடனடியாக செலுத்த ஏற்பாடு


விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ- மாணவிகள் தடுப்பூசி போடாதவர்களுக்கு உடனடியாக செலுத்த ஏற்பாடு
x
தினத்தந்தி 1 Sep 2021 5:22 PM GMT (Updated: 2021-09-01T22:52:03+05:30)

விழுப்புரம் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு தற்போது சரிந்து வருவதால், கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேற்று முதல் திறக்கப்பட்டது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், 2 அரசு, தனியார் சட்டக்கல்லூரிகள், 26 அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 9 அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள், 21 அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என 69 கல்லூரிகள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டன.

மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி

நேற்று காலை கல்லூரி தொடங்கியதும் மாணவ- மாணவிகள் முககவசம் அணிந்து உற்சாகமாக வந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலையை பரிசோதித்தனர். மேலும், மாணவ- மாணவிகளிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை பெற்று கல்லூரிக்குள் அனுப்பி  வைக்கப்பட்டனர்.

 இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவ- மாணவிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விதமாக கல்லூரி வளாகங்களில் தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு வகுப்புகளுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Next Story