கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 2 Sep 2021 1:00 AM GMT (Updated: 2 Sep 2021 1:00 AM GMT)

நீலகிரியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

ஊட்டி

நீலகிரியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

கோமாரி நோய் தடுப்பூசி

நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியின் தொடக்க நிகழ்ச்சி, ஊட்டி காந்தலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி தடுப்பூசி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 28 ஆயிரத்து 500 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணி வருகிற 21-ந் தேதி வரை நடைபெற்று முழுமையாக செலுத்தி முடிக்கப்படும். 

எனவே அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு கால்நடைகளை கோமாரி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகளில் அந்தந்த பகுதி விவசாயிகள் முகாம் நடைபெறும் நாட்களை கேட்டறிந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றார்.

ஊட்டச்சத்து கண்காட்சி

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், போஷான் அபியான் திட்டத்தின் கீழ் நேற்று முதல் நடப்பு மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. 

இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார். போஷான் அபியான் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்கி எடை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story