தமிழ்நாடு ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கழகம் மூலமாக மாணவ- மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்


தமிழ்நாடு ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கழகம் மூலமாக மாணவ- மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
x
தினத்தந்தி 2 Sep 2021 6:01 AM GMT (Updated: 2 Sep 2021 6:01 AM GMT)

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகளுக்கு குறுகிய கால (1 முதல் 6 மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படவுள்ளது.

மாணவர்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ-மாணவிகள் தங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப பயிற்சிகளை மேற்கொள்ள, தாட்கோவின் http//training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியாக பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியை கட்டணமின்றி பயிலலாம். பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்து படிகள் வழங்கப்படும். இந்த பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.சி.வி.டி., எஸ்.எஸ்.சி. சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கும் வழிவகை செய்யப்படும். மேலும் தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற பயிற்சி தொடர்பாக சுயதொழில் தொடங்கிட, http//application.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்து தொழில்முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் பயன் பெறலாம் மற்றும் அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க ஆவன செய்யப்படும். எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story