லாரி மோதியதில் சோதனைச்சாவடி இடிந்து விழுந்தது 2 போலீசார் உயிர் தப்பினர்

லாரி மோதியதில் சோதனைச்சாவடி இடிந்து விழுந்தது 2 போலீசார் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 2 Sep 2021 5:54 PM GMT (Updated: 2021-09-02T23:24:17+05:30)

ஆம்பூர் அருகே லாரி மோதியதில் சோதனைச்சாவடி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு பணியில் இருந்த 2 போலீசார் உயிர் தப்பினர்.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே லாரி மோதியதில் சோதனைச்சாவடி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு பணியில் இருந்த 2 போலீசார் உயிர் தப்பினர். 

சோதனை சாவடி மீது லாரி மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வந்தது. 

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட எல்லை மாதனூர் சோதனை சாவடியில் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென தாறுமாறாக வந்து சோதனைச்சாவடி மீது மோதியது. 

இதில் சோதனை சாவடி முற்றிலும் சேதமடைந்து மேற்கூரையும் இடிந்து கீழே விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அங்கு பணியில் இருந்த 2 போலீசார் உயிர் தப்பினர். 

டிரைவர் கைது

பின்னர் லாரி டிரைவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர் இதில் அவர் ஆரணி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 47) என்பதும் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து வெங்கடேசனை ஆம்பூர் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story