மின்பாதையில் பழுது; திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையுடன் நிறுத்தம்


மின்பாதையில் பழுது; திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையுடன் நிறுத்தம்
x
தினத்தந்தி 2 Sep 2021 7:42 PM GMT (Updated: 2021-09-03T01:12:10+05:30)

மின்பாதையில் ஏற்பட்ட பழுது காரணமாக திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையுடன் நிறுத்தப்பட்டது.

நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை- இரணியல் இடையே மின்சார ரெயில் பாதையில் நேற்று காலையில் திடீர் பழுது ஏற்பட்டது. இதையடுத்து திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 11.50 மணியளவில் நெல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த ெரயில் திருவனந்தபுரத்துக்கு செல்வது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ரெயிலில் இருந்த பயணிகள் பஸ்களில் நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சென்றனர். சில பயணிகள், தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா ரெயிலில் சென்றனர். இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். நெல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 2.25 மணிக்கு மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.

Next Story