கியாஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்தது; டிரைவர் பலி


கியாஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்தது; டிரைவர் பலி
x

கியாஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்தது; டிரைவர் பலி

ஓமலூர்,செப்.3-
கியாஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்தது. இதில் டிரைவர் பலியானார்.
டேங்கர் லாரி
கொச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி கியாஸ் ஏற்றிக் கொண்டு டேங்கர்  லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் சக்கரப்பட்டி பகுதியைச் சேர்ந்த நமச்சிவாயம் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஓமலூர் தார்சு பகுதியில் வசித்து வந்த அம்சவேணி என்பவருக்கு சொந்தமான வீட்டுக்குள் புகுந்தது.
டிரைவர் பலி
இதில் லாரி புகுந்ததில் வீடு மற்றும் காம்பவுண்டு சுவர் சேதம் அடைந்தது. லாரியை ஓட்டி வந்த நமச்சிவாயம் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நமச்சிவாயம் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story