சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து- கலெக்டர் எம்.ஆர்.ரவி அறிவிப்பு


சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து- கலெக்டர் எம்.ஆர்.ரவி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Sept 2021 2:00 AM IST (Updated: 3 Sept 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு குறைவால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் எம்.ஆர்.ரவி அறிவித்துள்ளார்.

கொள்ளேகால்:

கொரோனா பாதிப்பு குறைவு

  கேரளா, மராட்டிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் அந்த 2 மாநில எல்லையை ஒட்டி 8 மாவட்டங்களில் இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் சாம்ராஜ்நகர் மாட்டமும் ஒன்று.

  தற்போது இரவு-வார இறுதி ஊரடங்கு பலனாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

வார இறுதி ஊரடங்கு ரத்து

  இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் எம்.ஆர். ரவி அறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

  கேரளாவில் இருந்து வருவோரால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் மாவட்டத்தில் இரவு-வார இறுதி ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது மாவட்டத்தில் கொரோனா குறைந்து வருகிறது. அதனால் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கு வருகிற 13-ந்தேதி வரை அமலில் இருக்கும். கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு வருவோர் கட்டாயம் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Next Story