புதிய வழித்தடத்தில் பஸ் வசதி- ஞானதிரவியம் எம்.பி. தொடங்கி வைத்தார்
கடையம் யூனியனில் புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை, ஞானதிரவியம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
கடையம்:
கடையம் யூனியனுக்கு உட்பட்ட அடைச்சாணி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் புதிய வழித்தடத்தில் பஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளது. அடைச்சாணி முதல் அம்பை, கடையம் வழியாக தென்காசிக்கு பஸ் வசதி இல்லாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை நேற்று நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பாபநாசம் பணிமனை துணை மேலாளர்கள் சசி, பழனியப்பன், தொ.மு.ச. செயலாளர் மதியழகன், தொ.மு.ச. தலைவர் பெரியநம்பி செல்வம், பொருளாளர் முத்துமாறன் மற்றும் அடைச்சாணி ஊர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story